கடலூர் நகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த 9 துணை ஆட்சியர்கள் நியமனம்
கடலூர் நகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த 9 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அரசு விதிமுறைகளை மீறி இ-பாஸ் பெறாமல் வருபவர்களால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நோய் தடுப்பு பணியை தீவிரப்படுத்த கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளையும் கணக்கில் கொண்டு ஐந்து வார்டுக்கு ஒரு துணை ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் இதைத் தவிர 50 வீடுகளுக்கு ஒரு செவிலியர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. நேற்று 207 பேர் மீது முக கவசம் அணியாமல் நோய்த் தொற்றை பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர 96 வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Next Story

