சென்னை, அண்டை மாவட்டங்களை அச்சுறுத்தும் கொரோனா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனோ நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில், புதிய பாதிப்பு ஆயிரத்து 941 ஆக பதிவாகியுள்ளது.
சென்னை, அண்டை மாவட்டங்களை அச்சுறுத்தும் கொரோனா?
x
தமிழகத்தில் கண்டறியப்படும் புதிய தொற்றுகளில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 80 சதவீத பாதிப்பு கண்டறியப்படுகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்  அதிக தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன..

சென்னையில் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது. இதில் 16 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,  14 ஆயிரத்து 667 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கையில் 347 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 178 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 2ஆயிரத்து 882 ஆக உள்ளது.

இதில், ஆயிரத்து 255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 602  பேர் மருத்துவ  கண்காணிப்பில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 81 பேருக்கு புதிய தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனால் மொத்த பாதிப்பு ஆயிரத்து 865 உயர்ந்த நிலையில், 855 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

988 பேர் மருத்துவ கண்காணிப்பிலும் உள்ள நிலையில், இதுவரை 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காஞ்சிபுரத்தில், நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு புதிய தொற்றுக்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 709 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மாவட்டத்தில் 411 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 291 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்