இருசக்கர வாகனத்தில் ஏறி சீறிய நாக பாம்பு

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தில் நாக பாம்பு ஒன்று ஏறி, சீறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருசக்கர வாகனத்தில் ஏறி சீறிய நாக பாம்பு
x
ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தில் நாக பாம்பு ஒன்று ஏறி, சீறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மூக்கண்டபள்ளி காந்திநகரில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த அந்த பாம்பு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது ஏறியுள்ளது. பாம்பு சீறும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்குவந்த பாம்புபிடி வீரர் மாறன், அந்த நாக பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

Next Story

மேலும் செய்திகள்