வரும் கல்வியாண்டு முதல் அறிமுகமாகும் புதியபாடத்தொகுப்பு - பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு

வரும் கல்வியாண்டு முதல் அறிமுகமாகும் புதிய பாடத்தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் அறிமுகமாகும் புதியபாடத்தொகுப்பு - பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு
x
வரும் கல்வி ஆண்டில் இருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு 6 பாடங்களுக்கு பதில் 5 பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்திருந்தது. மாணவர்கள், தமிழ், ஆங்கிலத்துடன், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய 5 பாடங்கள் அல்லது தமிழ், ஆங்கிலம், உயிர் அறிவியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 5 பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில்,  தற்போது  பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், அரசு அறிவித்துள்ள பாடத்தொகுப்புக்கு அனுமதி பெற்ற பின்னரே மாணவர் சேர்க்கை நடத்த  வேண்டும் என திருவள்ளுவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவர் சேர்க்கையினை நடத்திவிட்டு அனுமதி கேட்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்