"அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்" - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

அமைச்சர் மாற்றத்திற்கான தேவை இருந்தால், அதுபற்றி முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
x
அமைச்சர் மாற்றத்திற்கான தேவை இருந்தால், அதுபற்றி முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
சுகாதாரத் துறை அமைச்சரை மாற்றுவதோ, அதிகாரிகளை மாற்றுவதோ முதல்வர் முடிவு என்றார். அமைச்சர்களும் அதிகாரிகளும் சோர்ந்துவிட கூடாது என்பதற்காக, அவர்களுடன்  இணைந்து முக்கிய முடிவுகளை முதலமைச்சர் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  அமைச்சரவை கூட்டம் அடிக்கடி  நடைபெறுவதன் மூலமாக, அமைச்சர்களிடையே நல்ல தொடர்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். இன்றைய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு முக்கியமான முடிவுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்த அவர்,  விரைவில், வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரியில், கொரோனா மையம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்