மீன் விற்பனை அங்காடிகளில் மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அச்சம்

கடலூர் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் விற்பனை அங்காடிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
மீன் விற்பனை அங்காடிகளில் மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அச்சம்
x
கடலூர் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் விற்பனை அங்காடிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் என அனைவரும் கடந்த 4 தினங்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் மீன்களின் விலை தற்போது சற்று குறைந்துள்ள நிலையில் இன்று அனைத்து மீன் மார்க்கெட்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்பிடி துறைமுகத்திலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் குவிந்தனர். இது கொரோனா தொற்று அதிகரிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


-------------------------------------------------------------

Next Story

மேலும் செய்திகள்