கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் - பெண்ணை கர்ப்பமாக்கி வாழ்க்கையை சீரழித்த உதவி ஆய்வாளர்

கன்னியாகுமரி அருகே உதவி கேட்டு வந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்து அவரது வாழ்க்கையை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கேள்விக் குறியாக்கி உள்ளார்
கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் - பெண்ணை கர்ப்பமாக்கி வாழ்க்கையை சீரழித்த உதவி ஆய்வாளர்
x
கன்னியாகுமரி அருகே உதவி கேட்டு வந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்து அவரது வாழ்க்கையை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கேள்விக் குறியாக்கி உள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.... 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த இளம்பெண் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வேறொரு நபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த நபரும் தன்னை ஏமாற்றியதை அறிந்த அந்த பெண், பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளரை  சந்தித்து தன் நிலையை விளக்கியுள்ளார். 

யாருடைய ஆதரவும் இன்றி தனியாக வந்த அந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுப்பது போல நடித்த உதவி ஆய்வாளர் , தன் வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். ஆனால் இரவில் அந்த பெண்ணிடம் வலுக்கட்டாயமாக அவர்  அத்துமீறியதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ந்து போன அந்த  பெண் அதன்பிறகு அவரிடம் உதவி கேட்டு வரவே இல்லை. ஆனால் சில நாட்களிலேயே உடலில் மாற்றங்கள்  தென்பட மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் அந்த பெண். அப்போது தான் அவர் கர்ப்பமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறவே, அவர் தன் நண்பர்கள் சிலருடன் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். 

அங்கு அவரை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததோடு மருத்துவமனையில் சிகிச்சையும் வழங்கியிருக்கிறார். மயக்கம் தெளிந்து நடந்ததை அறிந்த அந்த இளம்பெண் அதிர்ச்சியில் கதறியிருக்கிறார். மேலும் மருத்துவமனை தொடர்பான ஆவணங்களையும் காவல் உதவி ஆய்வாளர் எடுத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த அந்த பெண், மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். 

பட்டினியோடு போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தனக்கு நியாயம் கிடைக்கும் வரை நகர மாட்டேன் என கூறி கதறி வந்துள்ளார். இந்த சம்பவம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியவந்ததை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர்  பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இது ஒருபுறமிருக்க அரசியல் பிரமுகர் ஒருவரிடம் உதவி கேட்டு இந்த பெண் சென்ற நிலையில், அவரும் இந்த பெண்ணை மிரட்டியதோடு காவல் உதவி ஆய்வாளருக்கு ஆதரவாக இருந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண், இறுதியாக மாதர் சங்கத்தின் உதவியை நாடியிருக்கிறார். 

தன்னுடைய வாழ்க்கை தொலைந்து போனதை அறிந்த அந்த பெண், அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர போராடிக் கொண்டிருக்கிறார்

Next Story

மேலும் செய்திகள்