மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
x
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்காக, நீர் இருப்பை பொருத்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில்  தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 புள்ளி 01 அடியாகவும், நீர் இருப்பு 64 புள்ளி 85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமானது என்பதால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று  தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் திறந்து விடுகிறார். மேட்டூர் அணை திறப்பால், சாகுபடி பணிகளில் டெல்டா விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்