கோழிப்பண்ணை கழிவுகளால் ஈக்கள் தொல்லை - உணவு-குடிநீரில் ஈக்களின் படையெடுப்பால் திணறும் கிராமம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சின்னபுத்தூர் கிராமத்தில் ஈக்கள் தொல்லை அதிகாரிப்பால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்
கோழிப்பண்ணை கழிவுகளால் ஈக்கள் தொல்லை - உணவு-குடிநீரில் ஈக்களின் படையெடுப்பால் திணறும் கிராமம்
x
தாராபுரம் அருகே உள்ள சின்னபுத்தூர், புளியமரத்து பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணை கடந்த 5 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் இருந்து ஈக்கள் படையெடுப்பு அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் மற்றும் உணவு பொருட்களில் ஈக்களில் தொல்லை ஏற்பட்டுள்ளது.  இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அச்சமடைந்துள்ள மக்கள், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்