ஏரியை தூர்வாரித்தர கிராம மக்கள் கோரிக்கை - வெள்ளநீர் ஊருக்குள் புகும் என அச்சம்
சிதம்பரம் அருகே ஏரியை சரியாக தூர்வாரவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிதம்பரம் அருகே ஏரியை சரியாக தூர்வாரவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். புவனகிரி அருகே சொக்கங்கொல்லை ஏரி என்ற மிகப்பெரிய ஏரி உள்ளது. சுமார் 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், ஏரியை தூர்வாரித்தருவதாக ஏற்றுக்கொண்ட என்.எல்.சி நிர்வாகம், பணிகளை சரியாகசெய்யவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மழைக்காலத்தில் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story