நிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது
நிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மும்பை, தானே, ரெய்காடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த புயலால் கோவா , மகாராஷ்டிரா , குஜராத் , மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
Next Story