பாகனை கொன்ற தெய்வானை யானை - சிகிச்சைக்கு பிறகு வனப்பகுதிக்கு அனுப்பி வைப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கோவில் யானை திருச்சியில் உள்ள உயிரின வனப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாகனை கொன்ற தெய்வானை யானை - சிகிச்சைக்கு பிறகு வனப்பகுதிக்கு அனுப்பி வைப்பு
x
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கோவில் யானை திருச்சியில் உள்ள உயிரின வனப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 24-ந் தேதி மாலை தனது பாகனின் உதவியாளர் காளி என்ற காளிதாஸை தெய்வானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவகுழு கட்டுப்பாட்டில் இருந்து வந்த தெய்வானை யானை, தற்போது சீரான நிலைக்கு திரும்பியதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் வன உயிரின பாதுகாப்பு அலுவலர்கள் யானையை பார்வையிட்டனர்.  இதனையடுத்து யானை தெய்வானை, திருச்சி அருகே உள்ள வன உயிரின பகுதியில் விடப்பட்டது.Next Story

மேலும் செய்திகள்