அரசின் வழிமுறைகள் மீறிய விவகாரம் - இதுவரை ரூ.4.76 லட்சம் அபராதம் வசூல்

அரசின் வழிமுறைகள் மீறியதாக இதுவரை ரூ.4.76 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அரசின் வழிமுறைகள் மீறிய விவகாரம் - இதுவரை ரூ.4.76 லட்சம் அபராதம் வசூல்
x
* திருமழிசை காய்கறி சந்தையில் அரசின் வழிமுறைகளை மீறியதாகக் கூறி, இதுவரை  4 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது

* கோயம்பேடு பரவலை தொடர்ந்து, அங்கிருந்த சந்தை தற்போது திருமழிசையில் செயல்பட்டு வருகிறது. கடந்த 21 நாட்களாக செயல்பட்டு வரும் தற்காலிக சந்தையில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

* இதை கடைபிடிக்க தவறும் மொத்த வியாபாரிகளிடம் இருந்து இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக சந்தை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* குறிப்பாக முககவசம் அணியாமல் வந்த ஆயிரத்து 364 பேரிடம் இருந்து 2 லட்சத்து 72 ஆயிரத்து 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.  

* சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத ஆயிரத்து 16 பேரிடம் இருந்து 2 லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்