சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்தவருக்கு கொரோனா - சொந்த ஊருக்கு வந்த நிலையில் பாதிப்பு உறுதி

தென்காசி மாவட்டம் கோமதியாபுரத்தை சேர்ந்தவர், சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்தவருக்கு கொரோனா - சொந்த ஊருக்கு வந்த நிலையில் பாதிப்பு உறுதி
x
தென்காசி மாவட்டம் கோமதியாபுரத்தை சேர்ந்தவர், சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவர் தானாக முன்வந்து சளி, ரத்த மாதிரி பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.  இந்நிலையில் அவர், கடந்த 3 நாட்களாக சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்றதால் அங்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொற்று பரவாமல் இருக்க தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்