சிவகங்கை : கடுமையான வெயிலில் மணலூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன...

சிவகங்கை மாவட்டம் மணலூரில் அகழாய்வு பணிகள், கடும் வெயிலிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை : கடுமையான வெயிலில் மணலூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன...
x
கடந்த பிப்ரவரி 19ம் தேதியன்று கீழடி அகரம், கொந்தகை, மணலூரில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மணலூரில் பணிகள் ஆரம்பிக்காமல் இருந்த நிலையில், தற்போது அகழாய்வு  பணிகளை தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தொடங்கி வைத்தார். கடுமையான வெயிலிலும்  பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு ஏக்கர் பரப்பளவில், 10 குழிகள் தோண்ட முடிவு செய்யபட்டுள்ளதாக சிவானந்தம் தெரிவித்தார். செப்டம்பர் கடைசி வரை பணிகள் நடைபெறும் என்றும், ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். அகரம் மற்றும் மணலூரில் மனிதர் வாழ்விடமாக கருதி பணிகளை தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்