வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி
வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்றும், நாளையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணிக்கடைகள் மற்றும் ரெடிமேட் ஷோரூம்கள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட உள்ளது. சமூக விலகல் மற்றும் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

