கொரோனா தடுப்பு களப்பணியாளர் உயிரிழப்பு - மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே, கொரோனா தடுப்பு பணி முடிந்து வீடு திரும்பும்போது களப்பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
கொரோனா தடுப்பு களப்பணியாளர் உயிரிழப்பு - மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழப்பு
x
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மண்டல சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணியில் களப்பணியாளராக பணியாற்றி வந்தவர் கரும்பெருமாள். இவர் நேற்று புளியங்குடி, தேவிப்பட்டிணம் பகுதியில் கொரோனா தடுப்பு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். நெல்லை அருகே உள்ள அழகியாபாண்டியாபுரம் சென்றவுடன் பேருந்தை விட்டு இறங்கிய கரும்பெருமாளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிறிதுநேரத்திலேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் தூக்கி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கரும்பெருமாளின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்