புதிய முறையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு...

தமிழகத்தில்10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை புதிய முறையில் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
x
தமிழகத்தில்10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, புதிய முறையில் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3 ஆயிரம் தேர்வு மையங்களுக்கு மாற்றாக, தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் 12 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், தேர்வு மையங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, 20 மாணவர்களுக்கு பதிலாக 10 பேரை மட்டும் அமர வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, அவர்கள் வசிப்பிடத்திலேயே சிறப்பு மையத்தை ஏற்படுத்தி, தேர்வை நடத்த உத்தரவிட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்