மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை..
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை கண்டு எடுக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை கண்டு எடுக்கப்பட்டது. ஓடந்துறை காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து வனத்துறையினர் சோதனை செய்த போது 50 வயதான பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து கோவை அரசு வன கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆண் யானைகள் தாக்கியதில் காயம் ஏற்பட்டு பெண் யானை இறந்தது விசாரணையில் தெரிய வந்தது.
Next Story

