விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் - சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

விழுப்புரத்தில் மாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் - சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
x
விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு படித்து வந்த ஜெயஸ்ரீ என்ற மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த  அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் ஆகியோரால் தீ வைத்து கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை ஆவடியைச் சேர்ந்த சுமதி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் மனு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது...

Next Story

மேலும் செய்திகள்