அமெரிக்கா, மஸ்கட்டில் சிக்கிய 324 பேர் சென்னை வருகை

ஊரடங்கால் அமெரிக்கா மற்றும் மஸ்கட்டில் சிக்கிய 324 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர்.
அமெரிக்கா, மஸ்கட்டில் சிக்கிய 324 பேர் சென்னை வருகை
x
ஊரடங்கால் அமெரிக்கா மற்றும் மஸ்கட்டில் சிக்கிய 324 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். அமெரிக்காவில் இருந்து சிறப்பு விமானத்தில் 6 குழந்தைகள், 48 பெண்கள் உள்பட 141 பேர் வந்தனர். அதே போல் மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் 27 குழந்தைகள், 50 பெண்கள்  உள்பட 183 பேர் வந்தனர். இவர்களுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அரசு மற்றும் தனியார்  பேருந்துகள் மூலமாக 324 பேரும் சென்னை மற்றும் புறநகரில் உள்ள  தனியார் கல்லூரி மற்றும் ஓட்டல்களில்  தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்