உலக செவிலியர் தினம் இன்று... கொரோனா தடுப்பு பணிகளில் முன்நிற்கும் செவிலியர்கள்

இன்று சர்வதேச செவிலியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டும் அவர்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....
உலக செவிலியர் தினம் இன்று... கொரோனா தடுப்பு பணிகளில் முன்நிற்கும் செவிலியர்கள்
x
மே 12-ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் அதன் பிடியில் இருந்து மக்களை மீட்கும் பணியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்கு அளப்பரியது. 

இதனால் தங்கள் வாழ்க்கையில் பல சவால்களை கடந்து செவிலியர்கள் பலரும் கொரோனாவை துணிச்சலோடு எதிர்கொள்கின்றனர். களத்தில் நின்று கிட்டத்தட்ட ஒரு போரை எதிர்கொள்ளும் மனநிலையுடன் செவிலியர்கள் பணியாற்றி வருவதை  பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்குத் தேவையான உணவுகளை அளிப்பது, அவ்வப்போது நோயாளியின் உடல்நிலை குறித்து தகவலைக் கேட்டு அறிவது , மருந்து வகைகளை வழங்குவது என அவர்களின் சேவையும் பணியும் வார்த்தைகளால் அளவிட முடியாதது. 

கொரோனோ வார்டுகளில் பணியாற்றும் செவிலியர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் இருந்து விலகியே இருக்க வேண்டிய சூழலும் கூட. தங்கள் குடும்பத்திற்கும் நோய் தொற்று பரவி விட கூடாது என்ற அச்சத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு கூட பால் தர முடியாமல் தவிக்கும் செவிலியர்களும் நம் கண் முன்னே வந்து போகிறார்கள்... 

இதுபோல் தங்களின் உடல்நலன், உறக்கம், குடும்பத்தை மறந்து மக்கள் பணியாற்றும் செவிலியர்களுக்க கை குலுக்கி மனதார வாழ்த்து சொல்ல வேண்டிய தருணமும் இதுவே...

Next Story

மேலும் செய்திகள்