ஜூன் 1 முதல் 12 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
x
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.  அதன்படி, ஜூன் 1ம் தேதி - மொழிப்பாடமும், ஜூன் 3ம் தேதி - ஆங்கிலத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 5ம் தேதி - கணித தேர்வும், ஜூன் 6ம் தேதி - விருப்ப மொழிப்பாடத் தேர்வும் நடைபெற உள்ளது. ஜூன் 8ம் தேதி - அறிவியல் பாடத்திற்கும், ஜூன் 10ம் தேதி - சமூக அறிவியல் பாடத்திற்கும் தேர்வுகள் நடைபெற உள்ளது. ஜூன் 12ம் தேதி- தொழிற்பாடத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
Next Story

மேலும் செய்திகள்