கொரோனா நோயாளிகளை பரிசோதிக்க நடமாடும் எக்ஸ்ரே வாகனம் - துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

கொரோனா பரிசோதனை செய்வதற்காக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
கொரோனா நோயாளிகளை பரிசோதிக்க நடமாடும் எக்ஸ்ரே வாகனம் - துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 5 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பில் மொத்தமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனம் சென்னைக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் கொரோனா பாதித்தவர்களுக்கு சளியின் அளவை கண்டறிய முடியும். அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் பரிசோதனை செய்யலாம் என கூறப்படுகிறது. 2 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.





Next Story

மேலும் செய்திகள்