கொரோனா தொற்று அதிகம் உள்ள 75 மாவட்டங்கள் - ஆய்வு நடத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டம்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 75 மாவட்டங்களில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகம் உள்ள 75 மாவட்டங்கள் - ஆய்வு நடத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டம்
x
தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்,  பாதிப்பு அதிகம் உள்ள 75 மாவட்டங்களுக்கு மத்திய  குழுவினர் செல்ல உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்,  கொரோனா தொற்று சமூக பரவலாகிறதா என்பதை கன்டறிவதற்கு மத்திய குழுவினர் செல்ல உள்ளதாக தெரிவித்தனர். அங்கு வசிப்பவர்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன் உள்ளிட்டவற்றை கண்டறியும் பணிகளில்  மாநில சுகாதார துறையுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், பாரத் பயோடெக்  என்கிற நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மருந்து தொடர்பான சோதனை விலங்குகளுக்கு நடத்தப்பட்டு, பின்னர் மனிதர்களுக்கு சோதிக்கப்படும் என்றும்,  விரைவில் சரியான மருந்து கண்டறியப்படும் என நம்புவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்