தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அரசாணை வெளியீடு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கோரும் விண்ணப்பங்களையும், மேல்முறையீட்டு மனுக்களும் இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அரசாணை வெளியீடு
x
தகவல் பெறும் உரிமைச்  சட்டத்தின் கீழ், தகவல் கோரும் விண்ணப்பங்களையும்,  மேல்முறையீட்டு மனுக்களும் இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் விண்ணப்பித்து பரிசோதிப்பதாகவும், இதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக பள்ளிகல்வித்துறையில் அறிமுகப்படுத்த உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் இணையவழியில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த வசதி ஏற்படுத்தபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்