ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77 வயது மூதாட்டி உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 77 வயது மூதாட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 77 வயது மூதாட்டி, கொரோனா தொற்று காரணமாக, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூச்சு திணறல் காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் முதல் உயிரிழப்பு பாதிவாகி உள்ளது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர்களில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Next Story