திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைப்பு - முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை கோயம்பேடு சந்தைக்கு பதிலாக பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாயும் , துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் நேரில் பார்வையிட்டனர்.
திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைப்பு - முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு
x
சென்னை கோயம்பேடு சந்தைக்கு பதிலாக  பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாயும் , துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் நேரில் பார்வையிட்டனர். திருமழிசையில் 200 கடைகள் அமைக்கப்பட்டு கான்கிரீட் தரை அமைப்பு , சாலை , குடிநீர், உயர் மின்விளக்குகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் அங்கு நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர். ஒவ்வொரு கடையும் போதிய இடைவெளி விட்டு , மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருமழிசை சந்தை திறக்கப்பட்டதும் காய்கறி விலைகள் கணிசமாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். Next Story

மேலும் செய்திகள்