'டாஸ்மாக்' மூடல் - உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
டாஸ்மாக் மூடல் - உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்
x
சென்னை மாநகர காவல்  எல்லைக்குட்பட்ட பகுதி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தவிர்த்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட்டன. இதையடுத்து மதுபானங்களை வாங்க சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. இது தொடர்பான பொது நல வழக்கில், டாஸ்மாக் மதுக்கடைகளை   மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்ட விதிகளை கடைபிடித்த நிலையில், ஒரு சில இடங்களில் விதிமீறல்கள் காரணமாக  ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  பல மாநிலங்களில் ஊரடங்கின்போது மதுவிற்பனை நடக்கும் போது தமிழகத்தில் விற்கக் கூடாது என்று சொல்வது தவறானது என்றும் தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்