கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர், 9 சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர் மற்றும் 10 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
xகடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 390 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் 320 பேர் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. நேற்று ஒரே நாளில், 5 மருத்துவர், 5 செவிலியர் மற்றும் 10 சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட 34 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது வரை 26 பேர் மட்டுமே குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் இன்னும் 364 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மண்டலங்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி உள்ளதாகவும் மற்ற யாருக்கும் அறிகுறி தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்