தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.294 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட 2 நாட்களில், 294 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.294 கோடிக்கு மது விற்பனை
x
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட 2 நாட்களில், 294 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இரண்டாவது நாளில் மட்டும் 122 கோடி வசூலாகி உள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 32 கோடியே 45 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருப்பதாக, டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் கிர்லோஷ்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், நீதிமன்ற உத்தரவின் படி மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், இந்த காலத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்