ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
x
* தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

* டாஸ்மாக் கடைகளுக்கு உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியதாக குறிப்பிட்டு, மதுக்கடைகளை மூட உத்தரவிட கோரி, 

* மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான மவுரியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

* இதே கோரிக்கையை முன்வைத்து, வழக்கறிஞர் ராஜேஷ் என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

* இந்த வழக்குகளை நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது.

* தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை ஊரடங்கு காலம் முடியும் வரை திறக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

* ஆன் லைன் மூலம் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்