கள்ளச்சாராய வியாபாரிகளிடம் மாமூல் என புகார் - இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு எஸ்.ஐ. உள்ளிட்டோர் இடமாற்றம்

சேலம் அருகே கள்ளச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.
கள்ளச்சாராய வியாபாரிகளிடம் மாமூல் என புகார் - இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு எஸ்.ஐ. உள்ளிட்டோர் இடமாற்றம்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதும், விற்பனை செய்வதும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முருகன், சிறப்பு எஸ்.ஐ. பாபு ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சிறப்பு எஸ் ஐ ஜானகிராமன்,  இன்ஸ்பெக்டர் கார் டிரைவர்கள் முத்து,  சவுந்தரராஜன், எழுத்தர் விஜயபாலன் உள்ளிட்ட 4 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இதற்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், தங்களின் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என 4 பேரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்