சிறார்கள் இடையே அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - தமிழகத்தில் இதுவரை 142 சிறார்கள் கொரோனாவால் பாதிப்பு

சென்னையில் 3வது நாளாக தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சிறார்கள் இடையே அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - தமிழகத்தில் இதுவரை 142 சிறார்கள் கொரோனாவால் பாதிப்பு
x
தமிழகத்தில் இதுவரை 142 சிறார்கள் மற்றும் குழந்தைகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த 28ஆம் தேதி ஒரே நாளில், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை, ஏழு மாதங்கள் ஆன மற்றொரு குழந்தை, 1 மற்றும் 2 வயதில் மேலும் இரு குழந்தைகள் என நான்கு குழந்தைகள் உட்பட 9 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 29ஆம் தேதி சென்னையில் 2 மற்றும் 3 வயது குழந்தை உட்பட எட்டு சிறார்கள் கொரோனோ தொற்றுக்கு ஆளாகினர். இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக  நேற்று ஒரே நாளில், 3 வயது குழந்தை உட்பட சென்னையில் 11 சிறார்களுக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் உட்பட 45 சிறார்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகிய நிலையில், சென்னையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறார்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது  பெற்றோர்கள் இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்