ஆட்சியரிடம் உதவி கோரிய தாயார் - பயணம் செய்ய கார், செலவுக்கு பணம் வழங்கிய ஆட்சியர்
நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தை சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளி செல்வி என்பவர், உடல்நல குறைவால் அவதியுறும் தனது 2 குழந்தைகளுக்கும், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மாதமிருமுறை சிகிச்சை பெற்று வந்தார்.
நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தை சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளி செல்வி என்பவர், உடல்நல குறைவால் அவதியுறும் தனது 2 குழந்தைகளுக்கும், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மாதமிருமுறை சிகிச்சை பெற்று வந்தார். ஊரடங்கு உத்தரவால் குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில், இதுகுறித்து அவர் நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று, 3 பேரும் சென்னை செல்வதற்காக, கார் ஏற்பாடு செய்த ஆட்சியர், அவர்களுக்கு செலவுக்கு பணமும் வழங்கி உதவினார். நெல்லை ஆட்சியரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.
Next Story