கோயம்பேட்டில் இருந்து தப்பி வந்த கொரோனா தொற்றாளிகள்: தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ள போலீசார்- சுகாதார அதிகாரிகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் கோயம்பேட்டிலிருந்து கடலூருக்கு தப்பி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து தப்பி வந்த கொரோனா தொற்றாளிகள்: தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ள போலீசார்- சுகாதார அதிகாரிகள்
x
கோயம்பேடு சந்தையில் வேலைபார்த்த 2 பேர், கொரோனா தொற்றுடன் கடலூர் மாவட்டத்துக்கு தப்பி வந்ததை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுடன் சேர்ந்து, லாரியில் 45 பேர் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்குள் கோயம்பேடு சென்று வந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்