பிரசவத்திற்கு பின் இறந்த தாய்-சேய் - இறந்த தாய்க்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் பிரசவத்தில் இறந்து அடக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, 70க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரசவத்திற்கு பின் இறந்த தாய்-சேய் - இறந்த தாய்க்கு கொரோனா தொற்று உறுதி
x
சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த, 27 வயது கர்ப்பிணி, பிரசவத்திற்காக கஸ்தூரி பாய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 27ம் தேதி பிரசவித்த சிறிது நேரத்திலேயே தாய், சேய் இருவரும் உயிரிழந்தனர். இறந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட 70க்கும் மேற்பட்டோரை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு நிலையில், இறந்த பெண்ணுக்கு முன்கூட்டியே அந்த பரிசோதனை செய்யாதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்