கொரோனா தொற்றுடைய பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது - மருத்துவர்கள்

மதுரையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
கொரோனா தொற்றுடைய பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது - மருத்துவர்கள்
x
மதுரையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அனுப்பானடியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. சரியான உடல் எடையுடன் பிறந்த குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு 24 மணி நேரத்திற்குப் பின்னரே கொரோனா தொற்று குறித்த பரிசோதனை நடத்த முடியும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

 


Next Story

மேலும் செய்திகள்