முட்டை கோஸ் விற்க முடியாமல் தவித்த விவசாயி டுவிட்டரில் வீடியோ பதிவு - தமிழக விவசாயிக்கு உதவிய கர்நாடக எம்.பி.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்பி ஒருவர் முட்டைகோசை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து தமிழக விவசாயிக்கு உதவியுள்ளார்.
முட்டை கோஸ் விற்க முடியாமல் தவித்த விவசாயி டுவிட்டரில் வீடியோ பதிவு - தமிழக விவசாயிக்கு உதவிய கர்நாடக எம்.பி.
x
சத்தியமங்கலத்தில் தமிழக கர்நாடக எல்லையிலில் கெட்டவாடி கிராமத்து விவசாயி கண்ணையன் முட்டைகோஸ் பயிரிட்டிருந்த நிலையில், கொரோனாவால் யாரும் வாங்க முன்வரவல்லை. இதனால் வேதனை அடைந்த விவசாயி கண்ணையன், யாராவது தன் முட்டைகோசை வாங்க முன்வருமாறு வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா சார்பில் அவரது உதவியாளர் கண்ணையனை தொடர்பு கொண்டு முட்டை கோஸ்களை வாங்கி கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து கண்ணையன் தோட்டத்து முட்டைகோஸ்கள், பாஜக எம்.பி தேஜஸ்வி வீட்டிற்கு எடுத்துசெல்லப்பட்டு,  பின் அங்குள்ள மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால், மகிழ்ச்சியடைந்த கண்ணையன் டுவிட்டர் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்