ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி போலீசாரை பார்த்து தப்பியோடிய 3 பேருக்கு வலை

சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் ஏ.டி.எம்.மில் பாதுகாவலர்கள் இல்லாததை சாதகமாகி கொண்டு , கொள்ளை அடிக்க சிலர் முயற்சித்து உள்ளனர்.
ஏ.டி.எம். இயந்திரத்தை  உடைத்து கொள்ளை முயற்சி  போலீசாரை பார்த்து தப்பியோடிய 3 பேருக்கு வலை
x
சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட்  ஏ.டி.எம்.மில் பாதுகாவலர்கள் இல்லாததை  சாதகமாகி கொண்டு , கொள்ளை அடிக்க சிலர் முயற்சித்து உள்ளனர். ஏ.டி.எம். மையத்திற்கு உள்ளே செல்வதற்கு முன்பு அலாரம் வயர் மற்றும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவின் வயரையும் மர்ம நபர்கள் துண்டித்தனர். அலாரம் வயர் துண்டிக்கப்பட்டதும் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது. இதையடுத்து, அருகிலுள்ள கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் மற்றும் போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது, அங்கிருந்து 3 பேர் தப்பி ஓடினர். அவர்களைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்