முடங்கிய அகர்பத்தி தொழில் - 6,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் அகர்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் குடிசை தொழில்கள் முடங்கி போயுள்ளன.
முடங்கிய அகர்பத்தி தொழில் - 6,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
x
திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை,  திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட அகர்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் நேரடி மற்றும் மறைமுகமாக 6000 க்கும் மேற்பட்ட ஆண் - பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவால் இந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், 6000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் அரசின் உத்தரவைமீறி மறைமுகமாக  கடனை திருப்பி கேட்டு மிரட்டி வருவதாக தொழிற்சாலை உரிமையாளர் மகேஷ்வரன் தெரிவித்துள்ளார். இதேபோல, தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண் ஒருவர், குழந்தைகளுக்கு உணவின்றி தவிப்பதாக வேதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்