மூன்றாம் தலைமுறை வெண்டிலேட்டர் - பொறியியல் பட்டதாரி தலைமையிலான குழுவினர் அசத்தல்

ஒசூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி அகிலேஷ் மற்றும் அவரது குழுவினர் நவீன தொழில்நுட்பத்தில், குறைந்த செலவிலான, மூன்றாம் தலைமுறை வெண்டிலேட்டரை உருவாக்கியுள்ளனர்.
x
இந்த மூன்றாம் தலைமுறை வெண்டிலேட்டர், தொடுதிரை வசதியுடன், நோயாளிகளுக்கு செலுத்தப்படும் காற்றின் அளவு, காற்றழுத்தம், மூச்சு சூழற்சி, காற்றின்  வெப்பநிலை ஆகியவை குறித்த தகவல்களை துல்லியமாக காண்பிக்கிறது. இதுபோன்ற, வெண்டிலேட்டர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டால், சுமார் இரண்டரை லட்சம் செலவாகும் என கூறப்படும் நிலையில், இதனை 40 ஆயிரம் ரூபாய் பொருட்செலவில், 7 நாட்களில் வடிவமைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்