ஊரடங்கு உத்தரவு எதிரொலி - நாக்பூரில் இருந்து நடந்தே வந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

நாக்பூரில் இருந்து தமிழகத்துக்கு நடந்தே வந்த நாமக்கல் இளைஞருக்கு மாரடைப்பால் மரணம் நிகழ்ந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு எதிரொலி - நாக்பூரில் இருந்து நடந்தே வந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
x
நாமக்கல் மாவட்டம், ஆவத்திப்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர், நாக்பூரில் பணிபுரிந்து வந்தார். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக, விமானங்கள், ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதையடுத்து, லோகேஷ், 25 இளைஞர்களுடன் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நாக்பூரில் இருந்து நடந்தே வந்துள்ளார். பின்னர் வழியில், லாரியில் ஏறி வந்த இளைஞர்கள் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வந்துள்ளனர். அங்கு வாகன சோதனையில் சிக்கிய, லோகேஷ், மற்றும் அவரது நண்பர்கள், முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி இரவு முகாமில் இருந்தவர்களை மருத்துவத் துறையினர் பரிசோதித்தபோது திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக இளைஞர் லோகேஷ் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதனையடுத்து  மாவட்ட ஆட்சியர் தீவிர முயற்சியின் அடிப்படையில் லோகேஷின் உடல் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. நாக்பூரில் இருந்து தமிழகத்திற்கு நடந்து வந்ததால் இளைஞர் உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்