கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை
x
பரவிவரும் கொரோனா நோயை தடுக்க மதஇயக்கங்களின் ஒருமித்த ஆதரவை கோரும் விதமாக இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் பிற்பகல் 3 மணிக்கு கிறிஸ்துவ தலைவர்கள் 15 பேருடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

இதன் பின்னர் 4 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் முஸ்லீம் தலைவர்கள் 12 பேர் கலந்து கொள்ள உள்ளனர். 

மாலை 5 மணிக்கு  இந்து தலைவர்கள் 10 பேருடனும், 

மாலை 6 மணிக்கு ஜெயின் சீக்கிய மதத்தலைவர்களுடனும் ஆலோனை நடைபெற உள்ளது.  

முன்னதாக, காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் 25 துறை சார்ந்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்