ரயில் நிலையம் அருகே புற்களில் பற்றி எரிந்த தீயால் ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரயில் தாமதம்

நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில் நிலையம் அருகே புற்களில் பற்றி எரிந்த தீயால் ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரயில் தாமதம்
x
நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில்,  சூளூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சிறப்பு ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தை கடக்கும் போது தண்டவாளம் அருகே கோரைப் புற்கள் தீப்பற்றி எரிந்தது. அதையடுத்து ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் புறப்பட்டு சென்றது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கோரைப் புற்களில் பற்றிய தீயை அணைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்