"ரிசர்வ் வங்கி அறிவிப்பை செயல்படுத்த மறுக்கும் வங்கிகள்" - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு

மூன்று மாதங்களுக்கு தவணைத் தொகை வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், சில வங்கிகள் இதனை பின்பற்றாமல் உள்ளன என திமுக எம்.பி, கனிமொழி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
ரிசர்வ் வங்கி அறிவிப்பை செயல்படுத்த மறுக்கும் வங்கிகள் - திமுக  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு
x
மூன்று மாதங்களுக்கு தவணைத் தொகை வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், சில வங்கிகள் இதனை பின்பற்றாமல் உள்ளன என திமுக எம்.பி, கனிமொழி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், மூன்று மாதத்துக்கான கூடுதல் வட்டித் தொகையை அசல் தொகையுடன் சேர்த்து வசூலிக்க உள்ளதாக சில வங்கிகள் அறிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் புதிய சுமையை சுமத்தாமல் இருப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்