ஊரடங்கு உத்தரவு - எளிதாக்கப்பட்ட அனுமதி சீட்டு

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளியிடங்களுக்குச் செல்வோர் அனுமதிச் சீட்டு பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு - எளிதாக்கப்பட்ட அனுமதி சீட்டு
x
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளியிடங்களுக்குச் செல்வோர் அனுமதிச் சீட்டு பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிகளை சென்னையில் மாநகராட்சியும், இதர மாவட்டங்களில் வருவாய்த் துறையும் மேற்கொள்ளும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் உத்தரவில்,  குறிப்பிட்ட மாவட்டத்துக்குள் பயணிக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் மண்டல அலுவலர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், இதுகுறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்