"அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கை எனக்க தமிழக அரசு அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
* அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவை விரட்ட சமூக தொடர்பில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

* அத்துடன் மக்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தையும், பீதியையும் தணிப்பற்குரிய தகவல்களை அளித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

* கொரோனா பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடியாது என தெரிவித்துள்ள அவர்,  

* அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்று பட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது என்று கூறியுள்ளார்.

* இதற்காக காணொளி காட்சி மூலம் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, முதலமைச்சர் ஆக்கப்பூர்வ நடிவடிக்கையில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்