முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை தாருங்கள் - பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள், நிறுவனங்கள் நன்கொடைகளை அளிக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும், நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இப்பெரும் இன்னலில் இருந்து மக்களை விடுவிக்க உதவி தேவைப்படுவதால், பொதுமக்கள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் நன்கொடையாளர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிப்பினை அளிக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நன்கொடைகளுக்கு 80 ஜி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நன்கொடைகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலகம், சென்னை என்கிற முகவரியில் 
11 720 10 000 000 70 என்ற வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்