நடுரோட்டில் தவிக்கும் ஆந்திர தொழிலாளர்கள் - எல்லைக்குள் அனுமதிக்க மறுக்கும் ஆந்திர போலீஸ்

கும்மிடிப்பூண்டி அருகே தமிழக அதிகாரிகளின் உதவியை புறக்கணித்த ஆந்திர தொழிலாளர்கள், நடுரோட்டில், உணவு, குடிநீரின்றி பரிதவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நடுரோட்டில் தவிக்கும் ஆந்திர தொழிலாளர்கள் - எல்லைக்குள் அனுமதிக்க மறுக்கும் ஆந்திர போலீஸ்
x
ஊரடங்கு உத்தரவு காரணமாக, சென்னை முகப்பேர்,  அண்ணாநகர், ஆவடி மற்றும் அம்பத்தூர்  பகுதியில் தங்கி பணிபுரிந்த ஆந்திராவைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள், லாரியில் தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் அனைவரும் தமிழக-ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைசாவடியில் இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், கட்டுமான தொழிலாளர்கள் நடைபயணமாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களை எல்லைக்குள் அனுமதிக்க ஆந்திரா போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் செய்வதறியாது தவித்த ஆந்திரா கட்டுமான தொழிலாளர்களுக்கு, உதவ தமிழக அதிகாரிகள் முன்வந்தனர். இந்த உதவியை ஏற்க மறுத்த அவர்கள், உணவு, குடிநீரின்றி நடுரோட்டில், 500க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக காத்திருக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்